கொரோனா காற்றில் பரவுவது எப்படி?

Click ▶ for audio

கிருஷ்ணதாசன்

உலக சுகாதார நிறுவனம் முதலில் தும்மல், இருமல் மற்றும் தொடுதல் மூலமாக கொரோனா வைரஸ் பரவுகிறதென்று அறிவித்தது.  ஆதலால் முகக்கவசம் அணிந்திட மற்றும் கைகளை உடனுக்குடன் கழுவச் சொன்னார்கள்.  சில நாடுகளில் நடைபெற்ற ஆராய்ச்சி முடிவுகளின் படி கொரோனா வைரஸ் காற்றிலும் பரவுகிறதென்று முடிவு செய்யப்பட்டது.  காற்றில் கொரோனா எப்படி பரவுகிறது என்று விளக்குவதே இக்கட்டுரை.

ஆகாய விமானம் எப்படி பறக்கிறது என்று உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கலாம்.  ஓடு தளத்தில் மிக வேகமாக செல்கிறது விமானம்.  அதன் வடிவமைப்பின்படி விமானத்தின் மேல் பாகத்தில் காற்றின் வேகம் அதிகமாகவும் அடிப் பாகத்தில் குறைவாகவும் இருக்கும்.  காற்றின் வேகம் அதிகமாகும் போது அங்கு அழுத்தம் குறைவாக இருக்கிறது.  காற்றின் வேகம் குறைவாக இருக்கும் போது அழுத்தம் அதிகமாக இருக்கிறது.  பொருட்கள் எப்போதுமே அதிக அழுத்தம் உள்ள இடத்திலிருந்து குறைவான அழுத்தம் உள்ள இடத்திற்கு தள்ளப்படும்.  ஆக, மேலே அழுத்தம் குறைவாக இருப்பதால் விமானம் சாய்வாக மேலே ஏறுகிறது.

ஹெலிகாப்டர் எப்படி பறக்கிறது.  ஹெலிகாப்டரின் மேல் இருக்கம் காற்றாடி வேகமாக சுற்றுவதால் ஹெலிகாப்டரின் மேலே காற்றின் அழுத்தம் குறைவாக இருக்கும்.  கீழே அழுத்தம் அதிகமாக இருக்கும்.  அதனால் ஹெலிகாப்டர் மேலே தூக்கி செல்லப்படுகிறது.

இதை அறிவியலின் பெர்னெளலீஸ் கொள்கை விளக்குகிறது.  (காற்றின் வேகம் அதிகரிக்கும் போது அழுத்தம் குறைகிறது).

இதை போலவே கடற்கரை, குளக்கரை, ஆற்றங்கரை ஓரங்களில் சில நேரங்களில் மீன் மழையும் குளக்கரை ஓரங்களில் சில நேரம் தவளை மழை பெய்வது பற்றியும் நீங்கள்  கேள்விப்பட்டிருக்கலாம்.

அது என்ன மீன் மழை?  கடலின் மேல் பரப்பிலோ அல்லது ஆற்றின் மேல் பரப்பிலோ புயல் காற்று வேகமாக வீசம் போது, காற்று வீசும் இடத்தில் அழுத்தம் மிக குறைவாக இருக்கிறது கடற்பரப்பில் அழுத்தம் அதிகமாக இருக்கிறது.  ஆதலால் கடலின் மேற்பரப்பில் இருக்கும் காற்று கடல் நீரோடு மேலே தூக்கப்படுகிறது.  இதனோடு சேர்ந்து கடலிலுள்ள மீன்களும் (எடை குறைவாக உள்ள மீன்கள்) மேலே தூக்கப்படுகின்றன.  இவை காற்றோடு பயணம் செய்து காற்றின் வேகம் குறையும் போது கீழே விழுகின்றன.  இது தான் மீன் மழை.  தவளை மழையும் இப்படி தான்.

இதைப்போல் தான் காற்று வேகமாக வீசும் போது வீடுகளின் (ஓட்டு வீடுகள்) மேல் வேயப்பட்ட ஓடுகள் தூக்கி வீசப்படுகின்றன.  குடிசை வீடுகளிலும் வீட்டின் உள்ளே அழுத்தம் அதிகமாகவும் வீட்டின் மேல் பரப்பில் அழுத்தம் குறைவாகவும் இருப்பதனால் குடிசையின் மேற்கூரை தூக்கி வீசப்படுகிறது.

சில பத்தாண்டுகளுக்கு முன்பு ஆந்திரப் பிரதேசத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி.  ஒரு புயல் கரையை கடந்த பின் ஒரு எருமை மாடு மரத்தின் மேல் மாட்டிக் கொண்டிருந்தது.  இது எப்படி சாத்தியம்.  எருமை மாடு சாலையில் நடந்து கொண்டிருந்தது.  புயல் காற்று வேகமாக வீசும் போது மாட்டின் கீழே அழுத்தம் அதிகமாயும், மாட்டின் மேலே அழுத்தம் மிக குறைவாகவும் இருந்ததால் மாடு மேலே தூக்கப்பட்டது.  புயல் காற்றின் வேகம் குறையும் போது மாடு கீழே வர ஆரம்பித்தது.  பூமியின் மேல் இருந்த மரத்தின் மீது விழுந்தது.  ஆக காற்று, தண்ணீர், பொருட்கள் எல்லாமே அழுத்தம் மிக அதிகமான இடத்திலிருந்து அழுத்தம் மிக குறைவாக இருக்கும் இடத்திற்கு தள்ளப்படுகிறது.  அல்லது வேகம் மிக குறைவான இடத்திலிருந்து வேகம் மிக அதிகமாக இருக்கும் இடத்திற்கு தள்ளப்படுகின்றன (பெர்னெளலீஸ் கொள்கை).

சமீபத்தில் ஒரு ஊரில் புயல் வீசும் போது புதிதாகக் கட்டிய வீட்டின் மேற்கூரையான உலோகத் தகடு காற்றில் பறந்ததையும் வீட்டிலிருந்த குழந்தையை முதலில் காணவில்லை என்றும் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள்.  குழந்தையை எங்கெங்கோ தேடியும் காணவில்லை.  கடைசியில் அழுகுரல் கேட்டு அருகே சென்ற போது காற்றில் தூக்கி வீசப்பட்ட மேற்கூரையின் அடியில் குழந்தை தொட்டிலில் கிடந்தது.  அதாவது உலோகத் தகடுகளுக்கு கீழே உள்ள கம்பியில் தொட்டில் கட்டியதால், உலோகத் தகட்டோடு சேர்ந்து தொட்டிலும் தூக்கிச் செல்லப்பட்டது புரிந்தது.  குழந்தை பின்னர் காப்பாற்றப்பட்டது.

காற்று வேகமாக அடிக்கும் போது தூசி தூக்கப்பட்டு கதவு வழியாகவும், ஜன்னல் வழியாகவும் வீட்டினுள் வருகிறது.  இதை போல் தான் காற்றினால் தூக்கப்பட்டு காற்று வீசும் போது கொரோனா வைரஸ் (தூசியை விட மிக மிக சிறியது நம் கண்ணிலும் விழலாம், காதிலும் விழலாம் மற்றும் உடலின் எந்த பகுதியிலும் விழலாம்.  ஜன்னல்களும் கதவுகளும் திறந்திருந்தால் வீட்டிற்குள்ளும் வரலாம்.  அதற்காக கதவுகளையும் ஜன்னல்களையும் மூடி வைக்க முடியுமா?ஆதலால் முகக் கவசம் மட்டுமே உங்களை கொரோனா வைரஸிலிருந்து காப்பாற்றி விட முடியாது.  அப்போது என்ன தான் வழி.  ஏற்கனவே கூறிய படி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி பாவச் செயல்களை குறைத்து புண்ணிச் செயல்களை அதிகப்படுத்துவது தான்.  பாவத்தை குறைத்து புண்ணியத்தை அதிகப்படுத்துவதற்கு பாவச் செயல்கள் எவை புண்ணியச் செயல்கள் எவை என்று நீங்கள் அறிந்து கொள்வது அவசியமாகிறது.  இதை பற்றி மற்றொரு பதிவில் காண்போம்.  நன்றி.  வணக்கம்.  அடுத்த பதிவில் சந்திப்போம்.