Click ▶ for audio
எனது கல்லூரித் தோழர் திரு. ஜெபஸ்டின் செல்வகுமார் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் முதுநிலை விலங்கியல் ஆசிரியர். அப்பள்ளி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புதியம்புத்தூரில் அமைந்துள்ளது. அவர் நாட்டின் முன்னேற்றத்தில் நாட்டம் கொண்டவர். மத நல்லிணக்கத்தில் நாட்டம் கொண்டவர். நாங்கள் ஆதித்தனார் கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் போதே பல்வேறு விஷயங்களை விவாதிப்பது வழக்கம். இப்போது, அவர் எனது பதிவுகளைக் கேட்டு, ஒரு நாள், ‘மாணவர்கள் அவர்கள் விரும்பிய துறைக்குச் செல்வது தானே அவர்களுக்கு நல்லது. அதில் எப்படி தவறு காண முடியும்’ என்றார்.
‘ஒருவன் புண்ணியம் அதிகம் செய்திருந்தால் அவனுக்கு எந்தத் துறை உகந்ததோ, எந்த பெண் உகந்தவளோ அதையே விரும்புவான். பாவம் அதிகம் செய்திருந்தால் எதைச் செய்தால் அவன் கெட்ட விளைவுகளை அனுபவிக்க முடியுமோ, அதாவது எது அவனுக்கு உகந்ததில்லையோ அதையே விரும்புவான். அதைச் செய்வதன் மூலம் கெட்ட விளைவுகளை அனுபவிப்பான்’ என்றேன். பல மாணவர்கள் ஏற்கவே செய்யப்பட்ட பாவத்தின் காரணமாக தவறான துறையை, துணையை விரும்புகின்றனர். அதுதான் எனக்குத் தேவை என அடம்பிடிக்கின்றனர். பெற்றோர்களும் ஏற்கனவே செய்யப்பட்ட பாவத்தின் விளைவால் தம் மைந்தர்களுக்குத் தவறாக வழிகாட்டுகின்றனர். அதனாலேயே இன்று அகச் சமநிலை சிதைந்து மணமுறிவுகளும், தற்கொலைகளும், கொள்ளை, கொலை, வேலையில்லா திண்டாட்டம் போன்றவையும் அதிகரித்துவிட்டன. சில நிகழ்வுகளை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.
எங்கள் கிருஷ்ணா கல்வி நிலையத்தில், நான் வழக்கமாக என் மாணவர்களை, பாடத்தில் சில பகுதிகளை கொடுத்து போதிக்கச் சொல்வது வழக்கம். அதில் சில மாணவர்கள் மிக அருமையாகப் பாடம் நடத்துவர். அதில் ஒரு பெண் மிக மிகச் சிறப்பாக இயற்பியல் பாடம் போதிப்பது வழக்கம். ஒரு நாள் அவளை அழைத்து, நீ ஏன் பிற்காலத்தில் பள்ளியில் இயற்பியல் ஆசிரியையாகவோ அல்லது கல்லூரியில் பேராசிரியையாகவோ பணி செய்யக் கூடாது. உன்னுடைய குரல் வளம், முக வசீகரம், உயரம் எல்லாமே மிக பொருத்தமாக இருக்கின்றன’ என்றேன். ஆனால் அவள் பெற்றோரோ அவளை ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்த்துவிட்டனர்.
அவளுடைய குடும்பம் அரசியல் பின்புலம் கொண்டது. ஒரு நாள் அவள் அப்பாவும், அம்மாவும், அவளை பார்த்துவிட்டு திரும்பும்போது கார் விபத்துக்குள்ளானது. அவள் அப்பா விபத்து நடந்த இடத்தில் மாண்டார். அம்மா சில காயங்களுடன் தப்பினார். அதன் பிறகும் பல வருடங்கள் அவளுக்கு பல தொல்லைகள். காரணம், பொறியியல் அவளுக்கு உகந்த துறையல்ல. அவள் பொறியியல் படிப்பை தவிர்த்து இயற்பியல் துறையில் சேர்ந்திருந்தால் இழப்புகள் பலவற்றை தவிர்த்திருப்பாள். இன்னும் பல சாதனைகளைப் புரிந்திருப்பாள்.
மற்றுமொரு உதாரணம். இன்னொரு மாணவன். அவனும் மிக அருமையாக கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களை போதிப்பது வழக்கம். அவனிடமும் கல்லூரியில் பட்டப்படிப்பில் சேருமாறு அறிவுறுத்தினேன். பெற்றோர்களின் தூண்டுதலால் அவனும் பொறியியல் துறையில் சேர்ந்தான். நான்கு வருடமும் வெவ்வேறு தொல்லைகள். அவனுக்கும் அடிக்கடி விபத்துகள், பெற்றோருக்கும் விபத்து.
மேற்கூறிய இருவருமே மாபெரும் பணிக்காக வந்தவர்கள். அவர்கள் பாதை மாறிச் சென்றவுடன் இயற்கை பல்வேறு தொல்லைகள் கொடுத்தது.
இன்று தகுதியில்லாத சிலர் மருத்துவத் துறைதான் கண்டிப்பாக வேண்டுமென்று ஆசைப்பட்டு, அது கிடைக்காததால் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதற்குக் காரணம் பெற்றோர்களே. இளம் வயதிலேயே பெரும்பாலான பெற்றோர் ‘நீ மருத்துவராக வேண்டும்’ என்று சொல்லியே குழந்தைகளை வளர்க்கின்றனர். இது மிகவும் தவறு. அவர்களுக்கு உகந்த துறைக்கே பெற்றோர்கள் அனுப்ப வேண்டும்.
இன்று பெற்றோருக்கு பெரும்பான்மையான விபத்துகள், மாரடைப்பு போன்றவை பையேனா, பெண்ணோ கல்லூரியில் படிக்கும் போதோ அல்லது வேலையில் சேரும்போதோ அல்லது திருமணத்தின் போதோ தான் நடக்கிறது. இதற்குக் காரணம் கேட்டால் இயற்கை, ‘அவர்கள் என்னை சிதைக்கிறார்கள். நான் அவர்களை சிதைக்கிறேன்‘ என்று பதில் சொல்கிறது.
இப்போது நம் எல்லோருக்கும் அறிமுகமான ஒரு தலைவரைப் பற்றி பகிர்ந்துக் கொள்கிறேன். பல வருடங்களுக்கு முன், பாரதப் பிரதமர் இந்திரா காந்தி தனது மெய்க்காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அரசியலைக் கரைத்துக் குடித்த பல தலைவர்கள் இருந்தும், ராஜீவ் காந்தி பிரதமராக்கப்பட்டார். ஒரு நாள் திரு. ராஜீவ் காந்தி அவர்கள் காஞ்சி மகா பெரியவரைச் சந்திக்கும் போது, அவர் பிரதமர் ராஜீவிடம், ‘தாங்கள் அரசியலிலிருந்து விலகியிருப்பது நல்லது’ எனக் கூறினாரென்று ஒரு செய்தித்தாளில் படித்தேன். ஆம், அரசியல் அவருக்கு உகந்த துறையல்ல. அதனாலேயே பிற்காலத்தில் அவருக்கு அகால மரணம் ஏற்பட்டது.
‘எப்படி இவ்வளவு உறுதியாகக் கூறுகிறீர்கள்’ என்று நீங்கள் என்னை கேட்கலாம். ஆதலால் என்னுடைய அனுபவங்களையும் உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன். சில வருடங்களுக்கு முன்னால் எனக்கும் பல பிரச்சனைகள். தியானத்திலாழ்ந்தேன்.
இறைவனிடம் ‘நான் நேர்மையாக உழைக்கிறேன். எனது மாணவர்கள் அனைவரையும் அதிக மதிப்பெண் பெறச் செய்கிறேன். நாட்டிற்கும், சமுதாயத்திற்கும் எனது பங்களிப்பை அதிகமாகவே செய்கிறேன். தவறு செய்பவர்கள்தான் தண்டிக்கப்படுவர் என்பது நியதி. பின் ஏன் என்னைத் தண்டிக்க விரும்புகிறீர்கள். தண்டிக்கின்றீர்கள்’ என்றேன். சில நாட்களில் ‘எல்லோரும் என்னைச் சிதைக்கிறார்கள். நீயும் அவர்களுக்கு உதவுகின்றாய். இது தவறில்லையா?‘ என்ற பதில் கிடைத்தது. ‘எனக்கு புரியவில்லையே, விளக்கமாகச் சொல்லுங்கள்’ என்றேன். ‘அந்தப் பெண்ணை ஆசிரியையாக்க விரும்பினேன். நீ மருத்துவராக்கிவிட்டாய். அந்தப் பையனை வியாபாரியாக்க விரும்பினேன். நீ பொறியியலாளராக்கி விட்டாய். ‘ இப்படிப் பல பதில்கள். மேலும் ‘பெற்றோர்கள் தன் ஆசையைப் பூர்த்தி செய்வதற்காக உன்னிடம் பணம் கொடுக்கிறார்கள். நீ அவர்களிடம் பணம் பெற்று உன் ஆசையைப் பூர்த்தி செய்து கொள்கிறாய். இருவரும் சேர்ந்து என் சமநிலையைச் சிதைக்கிறீர்கள். இது நியாயமா?” கொலை, கொள்ளை கூட என்னைப் பாதிப்பதில்லை. கொலை, பத்து வருடத்திற்கு பின்னால் சாகப் போகிறவன் பத்து வருடத்திற்கு முன்னால் செத்துவிடுகிறான். இதில் எனக்கு பாதிப்பில்லை. கொள்ளை, ஒருவனுடைய பொருள் இன்னொருவருக்குச் செல்கின்றது. சாகும் போது எல்லாவற்றையும் விட்டுவிட்டுச் செல்கிறான், இப்போது கொஞ்சம் முன்னால் விட்டுவிட்டான். அவ்வளவே. இதனால் எனக்குப் பாதிப்பில்லை. கொல்பவன் கொல்லப்படுவான். திருடுபவன் திருடப்படுவான். மனிதனின் முயற்சியால் செயலின் விளைவுகளை தாமதப்படுத்ததான் முடியும். தடுக்க முடியாது. ஆனால் என் சமநிலை பாதிக்கப்படும் போது அதனால் பேரழிவுகள் ஏற்படும். ஆகவே யார் எந்த வேலைக்குத் தகுதியானவனோ அதை உணரச் செய்து செயல் படுத்துவதுதான் உங்களது கடமையேயொழிய அவர்கள் ஆசையை பூர்த்தி செய்வதல்ல’ என்ற பதில் கிடைத்தது. நான் செய்த, செய்யாத தவறுகள் எனக்குப் புரிந்தன. தவறுகளின் தண்டனையை அனுபவித்தேயாக வேண்டும். யாருமே இயற்கையின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. இதை ஏற்கனவே உணர்ந்திருக்கிறேன். இயற்கை நம்மைத் தண்டிப்பதற்காக மற்றவர்களைக் கருவியாக உபயோகித்துக் கொள்கிறது. நமக்குப் புரியாமல் கருவிகளுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம். எனவே தண்டனையை அனுபவிப்பது என்று முடிவு செய்தேன்.
இறைவனிடம் ‘நான் செய்த தவறுக்கு தண்டனையை ஏற்றுக் கொள்கிறேன். தாராளமாக தண்டிக்கலாம்‘ என முறையிட்டேன். இயற்கை என்னைத் தண்டிக்க விரும்பியது. ஆனால் கடுமையாகத் தண்டிக்க முடியவில்லை. நான் செய்த தான தருமங்கள் எனது பாதுகாப்பு அரணாக என்னைக் காத்தன. புண்ணியத்தின் பலன் பிற்காலத்தில் குறையும் போது தண்டனை பல மடங்காகத் திரும்பிக் கிடைக்கும் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். இப்போது உடல் நன்றாக ஆரோக்கியமாக வலுவாக இருக்கும் போதே தண்டனையை அனுபவிப்பது என முடிவெடுத்தேன். பல சேவை நிறுவனங்களுக்கு மாதாமாதம் பணம் கொடுப்பது வழக்கம். ஒன்றைத் தவிர அனைத்தையும் தற்காலிகமாக நிறுத்தினேன். ‘இறைவா என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்கிறேன்’ என்று ஆழ்ந்து தியானித்தேன். சில மாதங்கள் கடந்தன. கல்வி நிலையம் (19 வருடங்கள்) நடத்தி வந்த கட்டிடத்தின் உரிமையாளர் அந்த இடத்தை காலி பண்ணச் சொன்னார். நான் ஏப்ரல் மாதம் காலி செய்கிறேன்’ என்றேன். ஆனால் எனக்கு கல்வி நிலையம் நடத்த ஏற்ற இடம் கிடைக்கவில்லை. கொடுத்த வாக்கை காப்பாற்றவும், இறை தண்டனையை அனுபவிக்கவும் இடத்தைக் காலி செய்தேன். ஆனால் பல மாதங்களுக்குப் பின்புதான் ஏதுவான இடம் கிடைத்தது. எனக்கோ கடுமையான பொருளாதார இழப்பு. இன்னும் நான் அதிலிருந்து மீளவில்லை. சில மாதங்களில் வீட்டில் சுமார் 15 சவரன் நகை திருடப்பட்டது. ஒரு வருடம் எனது குடும்பத்தைப் பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இன்னும் எவ்வளவோ. கால்பந்தாட்டக் களத்தில் வீரர்களால் எப்படி பந்து உதைக்கப்படுமோ அதைப் போல் இயற்கையால் நான் பந்தாடப் பட்டேன். பந்தாடப்படுகிறேன். ஆம் தவறுகளுக்கான தண்டனையை மனிதன் அனுபவித்தேயாக வேண்டும்.
ஆனால் அறியாமல் தவறு செய்தால் அதிலிருந்து தப்பிக்க ஒரே ஒரு வழி உள்ளது. அந்த வழி இறைவனால் எனக்கு 2019ம் வருடம் ஜுன் மாதம் உணர்த்தப்பட்டது. இதை என் மகளிடம் சொன்ன போது, ‘அப்பா, இது முன்பே தெரிந்திருந்தால் நாம் இவ்வளவு கஷ்டப்பட்டிருக்க வேண்டாமே’ என்றாள். நானோ ‘எனக்கு பல அனுபவங்கள் கொடுக்க வேண்டுமே? அதனால்தான் இப்படி ஒரு நாடகம் இறைவனால் நடத்தப்பட்டது’ என்றேன். அந்த வழியை காலம் அனுமதிக்கும் போது உங்களிடம் பகிர்ந்துக் கொள்கிறேன்.
இப்பிரச்சனைக் கெல்லாம் காரணம் பெற்றோர்களின் அறியாமையும், அரசாங்கத்தின் தவறான கல்வித்திட்டமுமே ஆகும். பெற்றோரின் கடமை, தம் மைந்தர்களுக்கு எது உகந்ததோ அதை உணரும் பயிற்சியை அளிக்க வேண்டும். அரசின் கடமை, மாணவர்களின் குறிக்கோளை உணரச் செய்து, பின்பற்றச் செய்யும் பயிற்சியை அளிக்க வேண்டும். அத்தகைய கல்வித் திட்டத்தை வடிவமைத்து செயல்படுத்த வேண்டும். நன்றி. வணக்கம். அடுத்த பதிவில் சந்திப்போம்.
அவன் இன்றி ஒரு அணுவும் அசையாது! அனுபவம் புகட்டிய பாடம்!
தங்கள் கருத்துக்கு நன்றி! பதிவுகளை தொடா்ந்து உள்வாங்குங்கள்!
Excellent interpretation on karma…my prayers for you and your family
தங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி! பதிவுகளை தொடா்ந்து உள்வாங்குங்கள்!
Sorry, if everything goes on its designated course we can’t predict and act accordingly.
Therefore, simply construct ourselves as an harbinger is meaningless. Let the destiny takes its own course. Discourse is useless.
நண்பரே உங்கள் ஆதங்கம் புரிகிறது! உங்கள் ஆதங்கத்துக்கான பதில் நானே எல்லாவற்றையும் செய்கிறேன்! பதிவிலும் இருக்கிறது. மேலும் அனைத்து பதிவுகளையும் உள்வாங்கி வாருங்கள், பல சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும், நன்றி!
Arumai iyaa ….
solla varthai ellai …iyalaa …..
manam magizchi …
Nandri ….
Pirambha peratralae ….
Vazgha
அன்புடையீர்,
தங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி!
அன்புடன்,
கிருஷ்ணதாசன்